Published Date: September 5, 2022
CATEGORY: ECONOMY
மதுரை, செப். 3: புதிய முதலீடுக ளால் மதுரை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்கள் பெரும் வளர்ச்சியை அடையவுள்ளன என்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
‘நேட்டீவ்லீட்’தொழில்முனை வோர் அமைப்பு சார்பில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற முத லீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் கூட்டத்தில் அவர் பேசியது: மாநிலத்தின் வளர்ச்சி என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கி யதாக இருக்க வேண்டும். அத்த கைய நோக்கத்தை குறிக்கோளா கக் கொண்டு, தமிழக அரசு செய லாற்றி வருகிறது. அதன் அடிப்ப டையிலேயே புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்தல், இடஒதுக்கீடு என்பன உள்ளிட்ட பல்வேறு சவால்கள் அரசுக்கு இருக்கின்றன. இத்தகைய சூழலில் தொழில்முனைவோரின் ஒத்துழைப்பு என்பதும் முக்கியமாக இருக்கிறது. மனை வணிகம், தங்கம் ஆகியவற்றில் அதிக முதலீடுகளால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போவ தில்லை. எந்தவொரு மாற்றத்தைபும் ஏற்ப டுத்தாத, செயலற்ற வளர்ச்சியா கவே இருக்கும்.
தனிநபர் வருமானத்தை ஒப்பிடுகளில் குஜராத்தைக் காட்டிலும் தமிழகத்தில் சற்றுகுறைவாக இருக்கலாம். ஆனால், பெண் கல்வியில் அம்மாநிலத்தைக் காட்டிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. அதேபோல, மருத்து வர்களின் எண்ணிக்கை, குஜராத் தைக் காட்டிலும் தமிழகத்தில் அதிகம்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளப்பட்ட பல் வேறு நடவடிக்கைகளின் காரணமாக, நிதிநிலை சரியான திசையில்சென்றுகொண்டி ருக்கிறது. இதன் தொடர்ச் சியாக தொழில் முதலீ டுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கு முனைப்பு காட்டப் பட்டு வருகிறது. அமெரிக்கா,ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனங்களுடன்பேச்சு நடத்தப்பட்டு வரு கிறது. தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களில் அடுத்த 2 ஆண் டுகளில் புதிய முதலீடுகளை எதிர் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக, மதுரை நகரம் புதிய முதலீடுகளால் பெரிய மாற்றத்தைச் சந்திக்கவுள்ளதூ என்றார்.
தமிழ்நாடு புத்தொழில் புத் தாக்க நிறுவன இயக்குநர் சிவராஜா ராமநாதன், 'நேட்டீவ்லீட்’ தலைமை செயலர் அலுவலர் நாகராஜன் பிரகாசம் மற்றும் முத லீட்டாளர்கள், தொழில்முனை வோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Media: Dinamani